பக்கங்கள்

Wednesday, July 26, 2017

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்

அகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பின் இங்கு பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக இருக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான்.

தமிழகத்தில் 200 இடங்களில் 600க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. 1863லிருந்து 2011வரை 132 இடங்களில் சிறிதும் பெரிதுமாக அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. தொல்லியல் துறை Tamilnadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act 1966 சட்டத்தின் கீழ் தொன்மையான கோவில்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், மலை படுக்கைகள், சிற்பங்கள் மற்றும் கோட்டைகளை பாதுகாத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் 88 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில் ஒன்று கூட பௌத்த தளமோ, சிலையோ இல்லை, பெரும்பாலும் பல சிவன் கோவில்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. கஞ்சிவரத்தில் இரு ஜைன கோவில்கள் மற்றும் மதுரையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது, பௌத்த சமய அடையாளங்கள் இந்த பாதுகாப்பு சட்டத்தின் படி ஏன் ஒன்றுகூட பாதுகாக்கப்படவில்லை? 

இந்த அக்கறையின்மையினால் தான் பகவன் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதும், களவாடப்படுவதும், களவாடப்பட்ட சிலைகளை காவல் துறையில்  பதிவு செய்தும் மீட்கப்படாமையும், தடயங்கள் அழிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் தொடர்ந்தவன்னமாக இருக்கிறது. 

தமிழகமே  பௌத்த தளமாகயிருந்தது 
01. ஆண் பெண் என பாலின வேறுபாடோ, பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம். பகவன் புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது, மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது. உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது. சங்கங்கள் அமைத்து கல்வி, மருத்துவம் அளித்தது.

02. இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையே. ஆனால் அவற்றில்  அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர். எடுத்துக்காட்டாக  மர வழிபாடு, கோவிலில் தலைமுடி மழிப்பு, மஞ்சள் ஆடை உடுத்துவது, பௌர்ணமி வழிபாடு, தீபாவளி, கார்த்திகை தீபம், காமாட்சியம்மன் விளக்கு, பாத சேவை, மஞ்சள் உடுத்தி கரகம் எடுத்தல், ஆயுத பூஜை 

03. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார் வண. பிக்கு போதிபால.

04. இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியிருக்க காரணம் கடல்வணிகம் தான். உலகமுழுவதும் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு தமிழ் பௌத்தம் தான். கடல் தெய்வம் என்று அழைக்கப்படும் மணிமேகலையை தாய்லாந்தில் மணிமேகலை என்றும் பிற நாடுகளில் தாரா தேவி என்றும் வழிபடப்படுகின்றனர் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.

05. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்று கொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த வண. போதி தருமன். அவரை தமிழராகவே இங்கு கற்பிக்கப்படுகிறதே தவிர பௌத்தராக கற்பிக்கப்படுவதில்லை.            

06. தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்) செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியவர்

07. வட இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா  பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக வண.தருமபால ஆசிரியர் இருந்திருக்கிறார்.  இது போன்று பல சிறப்புகளை தந்தது தமிழ் பௌத்தம்

A காவிரிப்பூம்பட்டினம்

விரிவஞ்சி இங்கு காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய இரு இடங்களை எடுத்துக்கொள்ளப்படுகிறது. புகழ் பெற்ற சிறந்த துறைமுகம், வணிக முக்கியம் மற்றும் பௌத்தம் தழைத்தோங்கிய இடமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தின் முதல் பிக்கு என அறியப்படும் வண.அறவணடிகள் தமிழகத்தின் முதல் பிக்குணி என்று அறியப்பட்டும் மணிமேகலையும் வாழந்த இடம்.
அறிஞர் T. ராமச்சந்திரன் மற்றும் ஐயப்பன்
மால்யா, ஜாவா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு இந்தியாவிலிருந்த முதல் துறைமுகம் நாகப்பட்டினம் தான். எனவே பௌத்தத்தை கிழக்கத்திய நாடுகளுக்கு கொண்டுசெல்ல பிக்குகளுக்கும், பௌத்த அறிஞர்களும் இங்கு வந்து தங்கியிருந்து சென்றனர்.  
தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
பண்டைய காலத்தில் இருந்த இரண்டு வணிக வழி தடங்கல் கடல் வழி (Maritime) மற்றும் நில வழி (Overland). பகவன் புத்தர் பிறந்த பண்டைய இந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் மற்றும் மற்ற ஆசிய நாடுகளுக்கு செல்ல இவ்விரண்டு வணிக வழி தடங்கல் பௌத்தர்களுக்கு முதன்மையான வணிக வழி தடமாக இருந்தது. 
இந்த பண்டைய இணைப்பு வழிகள் பௌத்த சமயத்தையும், பண்பாடு மற்றும் கலை செல்வாக்கினை கண்டங்களுக்கும் அதற்கப்பாலும் கொண்டுசெல்ல வைத்தது. நாகப்பட்டினத்தில் ஏராளமான வெண்கல சிலை கிடைத்தது குறிப்பிடுவது என்னவென்றால் நாகப்பட்டினம் பௌத்த மையம் மட்டுமல்ல உருவாக்கப்பட்ட புத்தரின் வெண்கல சிலைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மையமாக திகழ்ந்துள்ளது.  
தமிழக கடற்கரையில் இருந்து ஆந்திர, ஒரிசா, பெங்கேல் வரை 127 பௌத்த விகாரங்கள் இருந்ததாக தொல்லியல் துறை தகவல் ஒன்றை அளிக்கிறார்.
கடல் வணிகத்தில் சிறப்பு பெற்றிருந்த இடமாதலால் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் அழகாய்வு செய்தபொழுது ரோமானிய நாணயமும்  வாணகிரி என்ற இடத்தில் மட்பாண்டங்களும் கிடைத்தது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழாய்வுகள்  

இந்திய தொல்லியல் துறையினரால்  காவிரிப்பூம்பட்டினத்தில் 1962-67, 1970-71, 1972-73 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு தொல்லியல் துறையினரால் 1994-95, 1997-98 பூம்புகாரிலும், 2007-08 செம்பியன் கண்டியூரிலும், 2008 ட்ரங்க்பார்  (Tranqebar) அகழாய்வு நடத்தப்பட்டது.

வானோக்கி நின்ற புத்த விகார் அழிப்பும் கண்டெடுத்த சிலையை கொடையாக அளித்து தடயங்கள் மறைப்பும்  
01.  அன்பு பொன்னோவியம்
பதினெட்டாம் நூற்றாண்டு இடைக்காலம் 1867 வரை வானோக்கி நின்ற புத்த விகார் தலைவாசல் ஆங்கிலேயரால் இடித்து தள்ளப்பட்டதை தமிழர் கண்டஉண்மை சம்பவமாகும். இங்கிருந்த விகாரையில் பௌத்தர்கள் வணங்கி வந்த பொன்னாலான புத்தர் சிலையை எடுத்து சென்று ஸ்ரீரங்கம் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்தினார்கள். (நூல்- உணவில் ஒளிந்திருக்கும் சாதி) 

02. அறிஞர் T. ராமச்சந்திரன்
1867ம் ஆண்டுவரை நாகப்பட்டினத்தில் புதுவெளி கோபுரம் (அ) சீனா கோபுரம் (அ) ஜெயின் பகோடா என்று அழைக்கப்படும் பௌத்த விகாரை இடித்து கிறித்துவ தேவாலயம் கட்ட அரசு அனுமதியளித்தது. 
இவ்விகார் அருகில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலுப்பை மரத்தின் அடியில் 3 அடிக்கு கீழ் 5 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் கண்டறியப்பட்ட முதல் புத்தர் சிலைகள் இச்சிலைகள் தான். இந்த 5 புத்தர் சிலைகளில் 4 சிலைகள் வெண்கலத்தால் (Bronze) ஆனது  ஒரு சிலை பீங்கான் பொருள் கலவையினால்(Porcelain) ஆனது. இந்த 5 புத்தர் சிலைகளில் ஒரு சிலையின் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 
புத்த விகார் மீது புதிதாக கட்டப்பட்ட கிறித்துவ தேவாலயத்தை காணவந்த சென்னை கவர்னர் நேப்பியர் பிரபுவிற்கு 1868ல் கொடையாக ஒரு சிலையை அளிக்கப்பட்டுவிட்டது. மேலும் நான்கு சிலைகளை 1871ல் பிரான்ஸ்க்கு கொடையாக அளிக்கப்பட்டுவிட்டது. 
03. கோவை இளஞ்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை
நகருக்கு வெளியே அதாவது நாகர்கள் வாழ்ந்த பட்டினத்திற்கு வெளியே கோபுரம் கட்டப்பட்டதால் வெளிக்கோபுரம் எனப்பெயர் பெற்றது. ஏற்கனவே இருந்த ஒளி தரும் வெளிக்கோபுரம் பழுது அடைந்ததால் புதிதாக கட்டப்பட்ட வெளிக்கோபுரம், புதுவெளி கோபுரம் என்று அழைக்கப்பட்டது. புதுவெளி கோபுரம் கலங்கரை விளக்கமாக கட்டப்பட்டதன்று. ஆனால் கலங்கரை விளக்கமாக பயன்பட்டது. 
சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் இந்த கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம்,  சீன  பகோடா (China Pagoda), மல்லன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது.  கி. பி 8 ஆம் நூற்றாண்டைசேர்ந்த கோபுரம்.
அரசின் குறிப்புப்படி 1846 கோபுரத்தின் புகைப்படமும் வரைபடமும் உருவாக்கப்பட்டன. ஆங்கில அரசு 11-10- 1858 கோபுரத்தின் நிலையை பற்றிய விபரத்தின் அறிக்கையை தஞ்சை ஆட்சியாளர் காப்பன் ஏஃப் ஒக்சு என்பவருக்கு எழுதியது 
01. ஐந்து அடுக்கு மாடங்களை கொண்டது புதுவெளி கோபுரம். 68 அடி உயரமுள்ளது. 41 சதுர அடி பரப்பளவு கொண்டது.  செங்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது 
02. கூரையின் சுற்று பக்கங்களில் அமைந்த பிதுக்கம் சிற்ப வேலைப்பாடுகள் உடையது. இதில் இருந்து ஒரு புத்தர் சிலையும் கிடைத்தது.
03.இதன் ஐந்தாவது மாடம் சிதைவுற்று இடிபாடு அடைந்ததால், இடிந்து விழுந்து பேராபத்து நேராமல் இருக்க வேண்டி அதனை இடித்து விட்டனர். பின்னர் நான்காவது மாடம் சிதைவுற்றது. இக்கோபுரத்தின் பின்புறத்தில் இயேசு சபையினர் (Jesus Society) ஒரு தொழுகை அறை அமைத்து இருந்தனர். அதற்க்கு இது இடைஊறு எனக்கருதி நான்காவது மாடத்தை இடித்து விட்டனர். எஞ்சிய மூன்று மாடம் 50 அடி உயரம். இதனை சுற்றி மண் பாதுகாப்பு அமைக்க காப்டன் ஒக்சு திட்டமிட்டு உருவாக்க 400 செலவாகும் என்று அதற்க்கு இசைவு வேண்டி 19/04/1859 ல் அறிக்கை அனுப்பினார்
04. அதற்கு இசைவு கிடைத்தும் செயல்படவில்லை. காரணம் ௦1 இயேசு சபையார் இதனை இடித்து விட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் அனுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் 01 கோபுரம் பாதுகாப்பாக இல்லை 02.  பின் உள்ள தொழுகை அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லை 03. இந்த நிலத்தை வாங்க வேண்டியுள்ளது 04   கோபுரத்தை இடித்து எடுப்பதால் கிடக்கும் செங்கல் கட்ட இருக்கும் கல்லூரிக்கு பயன்படும். (நூல் நாகப்பட்டினம்)       
ஆகழ்வாராய்வில் கண்டறியப்பட்ட புத்த விகார், புத்த பீடைகை மற்றும் சிலைகள்  
1963-64ஆம் ஆண்டு மேலையூர் என்னும் பகுதியில் பல்லவனீச்சுரம் என்னும் கோவிலுக்கு அருகாமையில் புத்தவிகார் கண்டுபிடிக்கப்பட்டது. பகவன் புத்தரை வழிபடுவதற்கும், பிக்குகள் தங்குவதற்கும் ஏற்ற வகையில் அறைகள் கட்டப்பட்டிருந்தது, இவ்விகாரையின் ஒரு அறையில் ஓர் சிறிய வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது, மற்றோரு அறையில் சலவைக்கல்லால் ஆனா பகவன் புத்தரின் பாத பீடிகை எனப்படும் புத்த பாதமும் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாத பீடிகை நாகார்ஜூனா கொண்டவை ஒத்து இருக்கிறது
புத்த பீடைகை
கோவை இளஞ்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை
சுமத்ரா தீவு சிரி விஜய மன்னன் சிரி விசய சூளாமணி வர்மன் நாகையில் வணிகத்தொடர்பு கொண்டிருந்தான். அவன் புத்த விகாரை ஒன்றை எழுப்ப விரும்பினான். இடையில் அவன் புகழும் எய்தவே அவன் மகன் சிரி விசய யோத்துங்க வர்மன் அப்பள்ளியை நிறைவேற்றி அதற்க்கு தம் தந்தை நினைவாக சூளாமணி விகாரை என்று பெயரிட்டான். விகார் கட்டுமான பணிகள் சோழ அரசன் இராஜராஜ I (985-1016) காலத்தில் துவங்கியது. ஆனால் அவரது மகன் இராஜேந்திர I (1012-1044) காலத்தில் நிறைவடைந்தது.   இரண்டு செப்பேடுகள் இங்கு கிடைத்தது, இலெய்டன் செப்பேடு என்றே அழைக்கின்றனர்.  காரணம் இலெய்டன் என்பது அயர்லாந்து நாட்டினுள் உள்ள ஒரு நகரம். நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆணை மங்கலம் செப்பேடுகளை எடுத்து சென்று இலெய்டனில் வைத்திருந்தனர். பல ஆண்டுகள் அங்கு இருந்ததால் இலெய்டன் செப்பேடு என்று அழைக்கப்பட்டது.
சிறிய செப்பேடு : தமிழ் எழுத்தில் உள்ளது. ஒன்பது அலகு நிலம் கொடையளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது 
பெரிய  செப்பேடு : தமிழ் மற்றும் வடமொழியில் உள்ளது. அரசன் ஆனைமங்கலம் என்ற கிராமத்தை உயரமான புத்த விகாருக்கு அளித்ததை குறிப்பிடுகிறது.
சத்திரிய சிகாமணி வளநாட்டின் பட்டினக் கூற்றத்தில்
உலகத்திற்கு திலகம் போன்ற நாகப்பட்டினத்தில் தன்
உயரத்திற்கு பொன் மலையையும் சிறிதாக காட்டி
தன் அழகினால் வியப்படையச்  செய்கின்ற சூளாமணி   விகாரை  
மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட வெண்கல சிலைகள், இஸ்துபா, விளக்கு மற்றும் மணிகள் 350

1910 ஆண்டு நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு சில சிலைகளும் 1926 ஆம் ஆண்டு வெளிப்பாளையம் என்ற இடத்திலிருந்தும் 1934 ஆம் ஆண்டு நாணயக்கார தெரு என்ற இடத்திலிருந்தும் ஏராளமான சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டது. அதாவது 1856லிருந்து புத்தர், அவலோகித்தர், மைத்ரே, தாராதேவி, ஜம்பாலா, வசுதாரா, ஆனந்தா சிலைகள் மற்றும் இஸ்துபா, விளக்கு மணி ஆகிய பொருட்கள் என மொத்தம் 350 வெண்கலங்கள் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இதில் 70 சிலைகள், 3 இஸ்துபா, 1 விளக்கு 1 மணி என மொத்தம் 75 வெண்கலன்களை மட்டும் சென்னை அருங்காட்சியகத்தில் வைத்து விட்டு மற்ற சிலைகளை இந்தியா முழுவதும் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பபட்டுவிட்டது.  புத்தர் சிலையின் ஒளிப்படங்கள் சில கீழ் இணைத்து இருக்கிறேன்.

(*வெளியே பாளையம் - நகருக்கு வெளியே அதாவது பட்டின நகருக்கு வெளியே அமைந்த பாளையம். பாளையம்  என்றால் போர் வீரர்கள் வாழும் இடம். வெளிப்பாளையம்  என்றால் நகருக்கு வெளியே போர் வீரர்கள் வாழும் இடம்)

 நாகபட்டின புத்தர் சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் 


முன்பு மும்பையில் உள்ள இளவரசர் வேல்ஸ் அருங்காட்சியம் என்று அழைக்கப்பட்ட அருங்காட்சியகம் இன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஆலய அருங்காட்சியம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாகபட்டின புத்தர் சிலையின் ஒளிப்படம்
நாகபட்டின புத்தர் சிலை,
இளவரசர்  வேல்ஸ் அருங்காட்சியகம்  மகாத்மா காந்தி சாலை, மும்பை 

நாகபட்டின புத்தர் சிலை அருங்கலை அருங்காட்சியகம் (Fine Arts Musuem)  பாஸ்டன் (Boston)   அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 

நாகபட்டின புத்தர் சிலை ப்ரூக்ளின் அருங்காட்சியகம் (Brooklyn Museum)  அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 
நாகபட்டின புத்தர் சிலை -  நார்டன் சிமோன் அருங்காட்சியகம் (Norton Simon Museum) , கலிபோர்னியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA)
நாகபட்டின புத்தர் சிலை - லாஸ் ஏஞ்சல் CCU அருங்காட்சியகம், கலிபோர்னியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 

நாகபட்டின புத்தர் சிலை -  சிகாகோவின் கலைத்துறை (The Art Institute of Chicago)  அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA)   
பதிரி திட்டா 
பதிரி திட்டா என்பது பாலி மொழி சொல். பதிரி என்றல் இலந்தை.  திட்டா என்றால் மேட்டு நிலம். பதிரி திட்டா என்றால் இலந்தை மரங்கள் நிறைந்த மேட்டு நிலம் என்று பொருள்.  இந்த பதிரி திட்டா விகார் அசோகா மன்னனால் நிறுவப்பட்டது. இங்கு தம்ம பாலா தங்கிருந்தார். நாகை வரலாற்றுக்கு கிடைத்த முதல் வரலாற்று தடம் இந்த பதிரி திட்டா. சீன அறிஞர் இந்த விகாரையை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிரி திட்டா தமிழகத்தில் முதன் முதலில் தோன்றிய விகார் என்பதால் இதனை ஆதிவிகார் என்று சிறப்பித்து கூறப்பட்டது. கி மு 265-270ல் கட்டப்பட்டிருக்கலாம். கி. மு 3 ஆம் நூற்றாண்டு  (கோவை இளன்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை)

இன்னும் கண்டறியாப்பட்டதா புத்த விகார்களும் சிலைகளும்  
தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி
01.  கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனின் உறவினன் மகேந்திரன் இலங்கைக்கு செல்வதற்கு முன் ஏழு புத்த விகார்களை நாகப்பட்டினத்தில் காட்டினார் என்று மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த விகாரையின் தலைவராக இருந்தவர் தான் அறவணடிகள்.

02. கணதாசர் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரை காட்டினார். இந்த விகாரையில்  ஆச்சாரிய புத்த தத்த மகா தேரர் அபிதம்மவதாரம் மற்றும் மதுராத்த விலாசினீ என்னும் நூலை இயற்றினார்.  
03.நாகப்பட்டினம் நாகநகரம் என்றும் கூறப்படுகிறது. நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்கள் முன் முதலில் குடியேறிய மண் தமிழ் மண். கி. பி 5 ஆம் நூற்றாண்டில் நாகமன்னனின் துணையுடன் கசபதேவர் நாகனான விகாரை கட்டினார். 

B காஞ்சீவரம்

காஞ்சீவரத்தின் சிறப்பு

சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங்
கி.பி 639 ஆம் ஆண்டில் பல்லவர் காலத்தில் காஞ்சி நகருக்கு பயணம் வந்த சீன அறிஞர் குறிப்பிடுவது காஞ்சி நகரத்தில்நூற்றுக்கணக்கான பௌத்த சங்கங்களும், 10,000 புத்த பிக்குகளும் இருந்தனர். ஸ்தவீரா என்ற புத்த சக்கர போதனைகளைப் படித்துக்கொண்டு இருந்தனர். அசோகரும் மகேந்திரரும் கட்டிய விகாரங்களும் தூபிகளும் இடிந்து கிடந்ததைக்கிறதென்று குறிப்பிடுகிறார்.
முனைவர் G. சேதுராமன் (பௌத்தக் கலை வரலாறு)
தென்னிந்திய வரலாற்றில் காஞ்சீவரம் அளவிற்கு எந்த ஒரு நகரமும் சிறந்த பௌத்த மையமாக திகழவில்லை. இன்றும் உலகமுழுவதும் அறியப்படும் இடமாக காஞ்சீவரம் உள்ளது. புகழ்பெற்ற  நாகார்ஜுனர் மகாயானத்தை காஞ்சியில் அறிமுகப்படுத்தினார்
வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம்   
பல்லவ மன்னர் சமண சமயம், சைவம் மற்றும் வைணவத்திற்கு ஆதரவு காட்டினார், கோவில்கள் அமைத்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைக்கிறது ஆனால் அவர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதனால் பல்லவர் காலத்தில் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்றுரைக்கிறார் வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம் பல்லவ பேரரசர் என்ற நூலில். அவர்களின் கருத்திற்கு மறுப்பு
அறிஞர் டி .ஏ. கோபிநாத் ராவ்:
1915 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். அச்சிலை 7’ 10” உயரம் (7 அடி 10 அகலம்). கி பி 7ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன் 1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். Dr D தயாளன் அவர்கள் கண்டுபிடித்த சிலையை 21/03/2016 அன்று மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று பார்த்தேன். தொல்லியல் துறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை

தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
கி பி 720 ஆம் ஆண்டு நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு விகார் கட்டப்பட்டது.காஞ்சிவாரத்தில் பல்லாவரம் அடுத்த கணிக்கிலுப்பை என்ற கிராமத்தில் ஒரு புத்தர் சிலையும் தம்ம சக்கரமும் உள்ளது. இங்கிருந்த புத்தர் சிலையை அழித்து அங்கே விநாயர் கோவில் கட்டப்பட்டது. இங்கு கட்டப்பட்ட இருந்த புத்தர் கோவில் பல்லவர் காலத்தை சேர்ந்தது.          
பீகாருக்கு காஞ்சியின்  கொடை 1930ஆம் ஆண்டு கயா மாவட்டத்தில் உள்ள குர்கிஹார் என்ற ஒரு மலை கிராமம் இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. அதன் விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

#கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள்நூற்றாண்டுகொடை விவரம்
1அம்ருதவர்மன்11நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை
2புத்தவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
3தர்மவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
4தூதசிம்மன்10நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
5பிரபாகரசிம்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை மற்றும் நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
6மஞ்சுஸ்ரீ வர்மன்11அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை & நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை
7வீரியவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகள் இரண்டு
8புத்தவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை & மணி
9புத்த ஞானர்10பீடம்
10சுகசுகர்10பீடம்
11விரோசன சிம்ம ஸ்தவிரர்10பீடம்
12நாகேந்திரவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
13சந்திரவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
14ரகுலவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
15வீரவர்மர்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
16அவலோகித சிம்மர்10பீடம்
17புத்தவர்மன் (கந்த குடி3 மணிகள்

பல்லவ மன்னன் புத்தவர்மன் பல்லவ இளவரசன் வண.போதி தருமன் என பல்லவ அரச குடும்பத்தினர் பௌத்தத்தில் இருக்கின்றனர். பௌத்தத்தை மிக கீழ்த்தரமாக இழிவாக எழுதிய மகேந்திர வர்மா பல்லவன் காலத்திலே பௌத்தம் செழித்தோங்கி இருந்தது என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. காஞ்சிவரத்தில் உள்ள பல்லவ மேடு என்பது பாலி மேடு என்பதன் மருவு. ஆதாரம் இன்றும் மக்கள் பாலி மேடு என்று அழைக்கின்றனர்   
காஞ்சிவரத்தில் அகழாய்வுகள்
01. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் 
காஞ்சி காமகோடி மடவளாகத்தில் 1962-63ல் அகழ்வாய்வு செய்தபோது கி.பி 2ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன மன்னன் 'ருத்ர சதர்கனி ' என்பவரின் காசு கிடைத்துள்ளது. சாதவாகனர் (பௌத்தர்கள்) காசுகள் கண்டறியப்பட்டிருப்பது. 

02. சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்ஆய்வுத்துறை
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1969-70 ஆம் ஆண்டுகளில் காமாட்சியம்மன் கோவிலின் அருகிலும், எகாம்பரேஸ்வர் கோயில் அருகிலும், ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்திலும் அகழாய்வு செய்தனர். அத்துறையினரே மீண்டும் 1970-71 ஆம் ஆண்டுகளில் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர்.

1969-70ஆம் ஆண்டு "புதலதிச" என்ற பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சாம்பல் நிறப் பானை ஓடு அகழாய்வில் கண்டெடுத்தனர். இந்த எழுத்துகள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைபில் காணப்படுகின்றது. "புதலதிச" என்பது ஒரு பௌத்த பிக்குவின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது.

1970-71ஆம் ஆண்டு பௌத்த ஸ்தூபி கட்டிடப்பகுதியை கண்டுபிடித்தனர். இந்த விகார் அசோகா மன்னர் காட்டியது இல்லை கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட கிள்ளி வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி காட்டியது என்றும் வரலாற்று அறிஞர்களிடியே இருவித கருத்து உள்ளது. மேலும் இளங்கிள்ளி தருமத வனம் ' என்னும் ஒரு பூந்தோட்டம் அமைத்து ஒரு புத்த பீடிகை அமைத்தார் என்று மணிமேகலையினால் அறியப்படுகிறது. 

காஞ்சியில் காமாட்சிக் கோட்டத்தில் உள்ள அன்ன பூரணியம்மன் சன்னதி முன்னர் மணிமேகலையின் கோவிலாக இருந்ததாகும் என்றும், தருமராசர்   என்ற புத்தருக்கு கட்டிய கோயில் பின் தருமன் கோயிலாயிற்று  என்றும் சிந்தாதேவி, தாரா தேவி ஆகிய பெண் தெய்வங்களின் கோயில்கள் அம்மன் கோயில்களாயின என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

03. காஞ்சிவரம் ஏனாத்தூர் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு 2008-09 ம் ஆண்டு புத்தகரத்தில் அகழாய்வு மேற்கொண்டது. காஞ்சிவரம் புத்தகரத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடையே உள்ள இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். இங்கு சிலையின் உடைந்த தொடைப்பகுதி கிடைத்தது. இங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் ¾ அடி உயர ஒரு புத்தர் சிலை உள்ளது. கட்டவாக்கம்  என்ற இடத்தில் 2001-02 அகழாய்வு செய்த பொழுது பௌத்த கட்டிட அமைப்பு மற்றும் திரிரத்தினம் கிடைத்தது.     

கட்டவாக்கம்  அகழாவில் கிடைத்த பௌத்த கட்டிட அமைப்பு மற்றும் திரிரத்தினம்
விரிவாக படிக்க 

Friday, March 24, 2017

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்


ஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும் விளக்கமும் அளிக்கப்படும். இந்த மாத தலைப்பு "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்" இந்த மாதம் 19 ஞாயிறு அன்று என்னுடைய உரை.

களப்பிரர் காலம் 
தமிழகத்தின் வரலாற்றை பார்க்கும் பொழுது தமிழகத்தை அரசாண்ட மன்னர்கள் யார் யார்? எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்? அவர்களின் ஆட்சி எவ்வாறு இருந்தது? அவர்களின் காலத்தில் வந்த நூல்கள் என்ன? அவர்களின் காலத்திய கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் என்ன? அவர்களின் காலத்திய சிலைகள், கோவில்கள், கட்டிடங்கள் என்ன? என்று கால வரிசைப்படி பார்க்கும் பொழுது கி பி 250 ல் இருந்து 575 வரை வரலாறுகள் ஏதும் இல்லை. வரலாற்று அறிஞர்கள் இக்கால வரலாற்றை அறிய தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று ஒற்றை வரியில் எழுதி முடித்தனர் இருண்ட காலம் என்று.

களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் 
வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் இரண்டு. ஒன்று தொல்பொருள் சான்றுகள் மற்றோன்று இலக்கிய நூல்களின் சான்றுகள். களப்பிரர் வரலாற்றை அறிய கிடைத்த தொல்பொருள் சான்றுகள் 01. வேள்விக்குடி செப்பேடு 02.தளவாய் புரா செப்பேடு 03. கூரம் செப்பேடு 04.பள்ளன் கோவில் செப்பேடு 05.வேலூர் பாளையம் செப்பேடு 06.சின்னமனூர் செப்பேடுகள்.

இவைகள் எல்லாம் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி அவர்கள் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (1976) என்ற நூலை எழுதுவதற்கு முன் கிடைத்தவை. அவர் இயற்கை எய்துவதற்கு முன் (1980 ஆண்டு மே மாதம்) 1979 ஆம் ஆண்டு பூலங்குறிச்சி கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது.

கல்வெட்டு மற்றும் செப்பேடுகளுக்கான  வேறுபாடுகள் 
களப்பிரர் வரலாற்றை பற்றி அறிய கிடைத்த தொல்பொருள் சான்றுகள் பெரும்பாலும் செப்பேடுகள். ஏன் செப்பேடுகள் அதிகமாக கிடைத்தது என்று வினா எழுப்பினால் அதில் நுட்பமான பதில் ஒன்று ஒளிந்து இருக்கிறது. இந்த நூட்பமான பதிலை அறிய கல்வெட்டு மற்றும் செப்பேடுகளுக்கான வேறுபாட்டை அறிந்தால் போதும்.
கல்வெட்டுகள் பொது இடங்களில் கோவில்கள், குளங்கள், குகைகள், மலைகள் என பெரிய பெரிய பாறைகளில் எழுதிவைக்கப்படுகிறது. பாறைகளில் எழுதப்படும் எழுத்துக்களின் அளவு பெரியதாக இருக்கும். தானம் அளிப்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்போன்று தானம் பெறுபவரும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கல்வெட்டு மூலம் அளிக்கப்படும் தானம் பொது பயன்பாட்டிற்க்கு மக்களுக்கு அளிக்கப்படுபவை.
செப்பேடுகள் அளவில் சிறியதாக இருக்கும். கைக்கு அடக்கமாக இருக்கும். எனவே எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லமுடியும். தானம் அளிக்கும் உரிமை மன்னனுக்கு மட்டுமே உள்ளது. அதைப்போன்று தானம் பெரும் உரிமையும் பிராமணர்களுக்கே உள்ளது. இதற்க்கு ஆதாரம் வேண்டும் என்றால் திரு வி பாலம்மாள் பாண்டிய மன்னன் அளித்த செப்பேடுகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கு அளித்தவையே என்றுரைக்கிறார். 
தானம் அளிக்கப்படும் நிலத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
 1. வேள்வி குடி:  பாண்டிய மன்னன் முது குடுமி பெருவழுதிக்கு வேள்வி செய்து வந்து கிராமத்தை இரு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. அக்கிரமத்தை வேள்வி குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
 2. திருமங்கலம்: தளவாய்புரம் என்ற கிராமம் பன்னிரண்டு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. இக்கிராமம் திருமங்கலம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
 3. சாசன மங்களம்: (சிவகாசி செப்பேடு) நாலாபுரம் என்ற கிராமம் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்படுகிறது. அக்கிரமம் சாசன மங்களம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதை போன்று சதுர்வேதி மங்களம்,          
செப்பேட்டின் மூலம் தானம் அளிக்கும் மன்னன் யார் என்று தெரியும், தானம் பெரும் பிராமணர்கள் யார் என்று தெரியும். செப்பேடுகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம்  ஆகிய இரு மொழிகளில் எழுதப்படுகிறது. இரு மொழி அறிஞர்களால் செப்பேடுகள் எழுதப்படுகிறது. எனவே அவர்கள் செய்யுள் வடிவில் செப்பேட்டை எழுதுகின்றனர். அவர்கள் வணங்கும் கடவுளை வாழ்த்தியும் வணங்கியும் செப்பேட்டில் எழுதுகின்றனர். 
சிவன்: வேள்வி குடி செப்பேடு சிவனை வணங்கி எழுதப்பட்டுள்ளது .
முக்கடவுள்: தளவாய்புரம் செப்பேடு சிவா, விஷ்ணு பிரம்ம ஆகிய முக்கடவுளையும் வணங்கி எழுதப்பட்டுள்ளது.   
களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த செப்பேடுகள்            
வேள்வி குடி செப்பேடு.  களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த முதல் வரலாற்று சான்று வேள்வி குடி செப்பேடு. இது 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது எங்கு கண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனை கண்டறிந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இந்த செப்பேடு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 
இது கி பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு. பாண்டிய மன்னன் நெடுஞ்சாடையான் உடையது. இது மொத்தம் பத்து செப்பேடுகளை கொண்டது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. 155 வரிகளை கொண்டுள்ளது. முதல் வரி முதல் முப்பது வரிவரை மேலும் 143 வரையில் இருந்து எட்டு வரி வரை மொத்தம் 38 வரிகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. மீதம் உள்ள 117 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. 
திரு கே ஜி சங்கரன் என்பவர் கி பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களை படித்தறிந்து கி பி இருபதாம் நூற்றாண்டில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள கூடிய வகையில் எளிமையாக எழுதி செந்தமிழ் என்னும் இதழில் வெளியிட்டார். அதன் பிறகு 1923 ஆண்டு Epigrapia  indica  என்னும் ஆங்கில இதழில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
தளவாய் புரா செப்பேடு: பாண்டிய மன்னனின் செப்பேடு. திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் பட்டி என்னும் வட்டத்தில் தளவாய்புரம் என்னுமிடத்தில் கிடைத்தது. இங்கு ஏழு செப்பேடுகள் கிடைத்தது.  
பிற செப்பேடுகள்: பல்லவ மன்னனின் கூரம் செப்பேடு, அதைப்போன்று பள்ளன் கோவில் செப்பேடு, வேலூர் பாளையம் செப்பேடு, சின்னமனுர் செப்பேடுகள்    
களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த கல்வெட்டு: பூலாங்குறிச்சி கல்வெட்டு. இது 1979 ஆண்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. திரு நடன காசிநாதன், நாகசாமி மற்றும் பேராசிரியர் அ பத்மாவதி அவர்கள் சென்று பார்த்து அதில் உள்ள எழுத்துக்களை படித்தறிந்து வெளியிட்டனர். இங்கு மூன்று கல்வெட்டுகள் கிடைத்தது. ஒன்று முழுமையாக சிதைந்து இருந்தது எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருந்தது. இரண்டாவது  கல்வெட்டு பாதி எழுத்துக்கள்  சிதைந்து இருந்தது. மூன்றாவது கல்வெட்டு தெளிவாக இருந்தது. இதன் காலம் கி பி 442 அதாவது ஐந்தாம் நூற்றாண்டு.  

களப்பிரர் வரலாறு பற்றி அறிய உதவும் நூல்கள். பெரிய புராணம் மற்றும் யாப்பெரும்கலம் ஆகிய இரண்டு நூல்களை மட்டுமே வரலாற்று அறிஞர்கள் பயன்படுத்தி உள்ளனர். மேலும் யாப்பெரும்கலம் கூட ஒரு சில செய்யுள்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். இலக்கிய இலக்கண நூல்களை  வரலாற்று அறிஞர்கள் சரிவர பயன்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்துகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள்.   அவர் 1976 ஆம் ஆண்டு களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்று நூலை வெளியிட்டார். இந்த நூல்தான் களப்பிரர் காலம் இருண்ட காலமில்லை என்றுரைத்த முதல் நூல். களப்பிரர் காலம் தமிழர் பண்பாடு தழைத்தோங்க வைத்த காலம் என பல சான்றுகளை அளிக்கிறார்.

அவர் நூல் வெளிவந்த பிறகு களப்பிரர் பற்றி வரும் வரலாறு மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் உரைப்பது என்னவென்றால் களப்பிரர் காலம் இருண்ட காலமில்லை அது பொற்காலம் (அ) இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்று. உதாரணம் திரு க ப அறவாணன் அவர்கள் எழுதிய "களப்பிர காலம் பொற்காலம்" என்ற நூல். பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள் எழுதிய "களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்" என்ற நூல்.

களப்பிரர் காலம் இருண்ட காலம் என வரலாற்று அறிஞர்கள் சொல்லியதற்கு காரணம் களப்பிரர் வரலாறு அறிய தரவுகள் கிடைக்கவில்லை என்பது கரணம் இல்லை அது வைதீகத்தை ஒடுக்கிய காலம் என்பதால் என்றுரைக்கிறார். பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள். களப்பிர  மன்னனை கலி அரசன் என்றும் களப்பிர காலத்தை கலி காலம் என்று சொல்லப்பட்டது என்றுரைக்கிறார்.

ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி அவர்களுக்கு முன்பு களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றுரைத்தார்கள் யார்? அந்த இருண்ட கால கண்டுபிடிப்பாளர்கள் யார்? என்று பார்த்தால் அவர்கள் வைதிக சிந்தனையாளர்கள் என்றுரைக்கின்றனர். (வரலாற்று அறிஞர்கள் 01 கே கே பிள்ளை 02 நீலகண்ட சாஸ்திரி 03 இராசமாணிக்கம்)  

களப்பிரர்  தமிழரா?  கன்னடரா?  வட இந்தியரா?  தென்னிந்தியரா?             
களப்பிரர் வட இந்தியர்: திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்றுரைக்கிறார். அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம். களப்பிரர் சுரேனியம் என்னும் சமண சமயத்தவரின் மொழியையும் பாலி என்னும் பௌத்தர்களின் மொழியையும் தமக்கு உரிய மொழியாக பயன்படுத்தினர். சமணமும் பௌத்தமும் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தது. எனவே களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்றுரைக்கிறார்.
களப்பிரர்  தமிழர்:   திரு இரகவா ஐயங்கார் மற்றும் கிருஷ்ணா சாமி ஐயங்கார் ஆகியோர் களப்பிரர் என்பவர் கள்வர்கள் என்றுரைக்கின்றனர். அவர்கள் வட தமிழகத்தின் எல்லையில் அதாவது தமிழக ஆந்திர பகுதியில் வாழ்ந்தவர் என்று விளக்கம் அளிக்கின்றனர். 
களப்பிரர் கன்னடர் - தென்னிந்தியார்: மேற்சொன்ன இந்த இரண்டு கருத்துக்களும் தவறு என்றுரைக்கிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி. அதற்கு அவர் நான்கு ஆதாரங்களை அளிக்கிறார். கள்வர் வேறு களப்பிர வேறு, கள்வர் என்பவர் தமிழர், களப்பிரர் என்பவர் கன்னடர், களப்பிரர் வட இந்தியாலிருந்து வந்தவரில்லை அவர்கள் தென் இந்தியர். வடுக இனத்தை சேர்ந்த திராவிடர் என்றுரைக்கிறார்   
01. பெரிய புராணம் -  சேக்கிழார் (கி பி 1113 -1150) அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இரண்டு நாயன்மார்களை பற்றி பேசும்பொழுது களப்பிரர் கன்னடர் என்று குறிப்பிடுகிறார். ஒருவர் பாண்டிய நாட்டை சேர்ந்த மூர்த்தி நாயனார் இன்னொருவர் சோழ நாட்டை சேர்ந்த கூற்றுவ நாயனார்.
மூர்த்தி நாயனார் - இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர். ஒரு வணிகர். சிவனடியார்க்கு சந்தனம் அரைத்து கொடுப்பவர். இவர் வாழ்ந்த காலத்தில் கடல் போன்ற தனைகளோடு வடுக கருனாட வேந்தன் பாண்டிய நாட்டை கைப்பற்றினான். சிவனுக்கு சந்தனம் கிடைக்காமல் செய்துவிட்டான். இவனுக்கு பிள்ளை பெரு இல்லை. எனவே மன்னன் இறந்த பின் முடி சூட மகன் இல்லை. எனவே பட்டத்து யானையின் கண்களை கட்டி நகர வீதியில் விடுகின்றனர். நகர வீதியில் நடந்து சென்று இருந்த மூர்த்தி நாயனாரை தூக்கி கொண்டு வந்துவிட்டது. அவருக்கு அமைசர்கள் முடி சூட சென்ற போது பொன் முடி வேண்டாம் சடை முடி, திருநீறும் ருத்திராசரமும் போதும் என்று முடி சுடாமல் ஆண்டான் என்றுரைக்கிறது. மயிலை சினி வேங்கட சாமி இங்கு இரு வினா எழுப்புகிறார். ஒன்று மூர்த்தி நாயனார் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்? இரண்டாவது மீண்டும் எப்படி களப்பிரர் ஆட்சி மலர்ந்தது?  இதுவரை பதிலில்லை. 
கூற்றுவ நாயனார் இவர் சோழ நாட்டில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் களப்பிர மன்னன் சோழ நாட்டை கைப்பற்றுகிறான். பின்னர் பிராமணர்களை அழைத்து முடி சுட கட்டளையிடுகிறான். சோழ மன்னனுக்கு மட்டுமே முடிசூட்டுவோம் என்று களப்பிர மன்னனுக்கு முடிசூட மறுத்து மன்னனுக்கு பயந்து சேர நாட்டிற்கு பொன்முடியோடு ஓடிவிட்டனர். எனவே முடிசூடாமல் களப்பிர மன்னன் ஆண்டான் என்றுரைக்கிறார் சேக்கிழார். மேலும் இவர் சைவர் என்றுரைக்கிறார் சேக்கிழார். 
02. கல்லாடம் என்ற நூல். இந்நூல் களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது. 
03. கன்னட நூல்களும் கல்வெட்டுகளும் களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது   
04. சமண சமய நூல்  வட்டாராதனெ களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது. அசோக மன்னனின் பாட்டன் சந்திரா குப்தா மௌரியர் நாட்டை துறந்து ,சமணம் ஏற்று, வட நாட்டை விட்டு தென்னாட்டிற்கு வந்து கன்னட நாட்டில் உள்ள களபப்பு என்ற இடத்தில் தாங்கினார். இங்கிருந்து வந்தவர்கள் தான் களப்பிரர் என்றுரைக்கிறது இந்நூல். 
களப்பிரர் அரசாண்ட பகுதி 
களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டை கைப்பற்றினார். பின்னர் சேர நாடு, சோழ நாடு. களப்பிரர் பல்லவ நாட்டை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் வென்றனர். களப்பிரரால் ஏன் பல்லவ நாட்டை கைப்பற்ற வில்லை என்பது ஆய்வுக்கு உரிய வினா. கேரளா நாட்டை முழுவதும் வென்று ஆண்டனர். கருநாடக மற்றும் ஆந்திர ஆகிய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளையும் இலங்கை நாட்டில் ஒரு சில பகுதிகளையும் வென்று அரசாண்டனர்.

களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றியது எவ்வாறு?  
தமிழகத்தை பல சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர். இவர்கள் எப்பொழுதும் ஒருவர் மீது ஒருவர் போரிட்டு கொண்டே இருந்தனர். போருக்கு காரணம் புலவர்கள் புகழ்வார்கள் என்றும் போரிடுவது வீரத்தின் அடையாளம் என்றும் போரிடாமல் இறந்து விட்டால் ஏற்படும் அவமானம் கருதியும் போரிட்டனர். மன்னன் ஒருவன் போரிடாமல்  இறந்துவிட்டால் அவனக்கு மிகப்பெரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இறந்த உடலை தருப்பைப்புல்லின் மீது வைத்து வாளால் மார்பை வெட்டி விழுப்புண் உண்டாக்கி பின் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலை தமிழகத்தை பலவீனப்படுத்தியது. இதனை பயன்படுத்தி களப்பிரர் கைப்பற்றினர் என்றுரைக்கிறார்  ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.    

தமிழகத்தில் வைதிகத்தின் செல்வாக்கு
வைதிகம் தமிழகத்தில் செல்வாக்கு பெருமுன் மன்னனுக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மன்னன் மக்களுக்காக போரிட்டான். எனவே போரில் மரணமடைந்தால், மன்னனுக்கும் மாவீரர்களுக்கும் நடுக்கல் இட்டு வழிபட்டனர். மக்களுக்காக மரணமடைந்தவன் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நடுக்கல் வைத்தனர். இரம்பையும் ஊர்வசியும் ஆடிப்பாடி அவர்களை மகிழவைப்பது போன்று அமைக்கப்பட்டது.

ஆனால் வைதிகர்கள் மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் மக்களுக்கும் சொர்க்கம் செல்ல வேறுவழியை காண்பித்தனர். வேள்வி மற்றும் சடங்கின் மூலம் சொர்க்கம் செல்லலாம் என்று.  அதனால் செல்வமும் அதிகாரமும் பெற்றவராக இருந்தனர். இதனை பண்டித அயோத்தி தாசர் பணம் சேர்க்கும் சாமி விவரம் என்ற தலைப்பில் எடுத்துரைக்கிறார்.

பொன் அணிகலன்களையும் இரத்தின அணிகலன்களையும் அணிந்து யாக குண்டம் அருகே அரசன் நின்று கொண்டு இருக்கிறான். அவ்வழியே வரும் ஒரு பிக்கு மன்னனை நோக்கி, மன்னா நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர் என வினாவினார். மன்னனும் பதிலுரைத்தார் நான் யாக குண்டத்தில் குதித்து சொர்க்கம் சொல்லப்போகிறேன் என்று. சொர்க்கம் செல்ல வழி உங்களுக்கு தெரியுமா என்று மீண்டும் வினாவினார். எனக்கு தெரியாது ஆனால் இங்கே மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்கும் வைதீகர்களுக்கு தெரியும் என்று பதிலுரைத்தார் . அப்படியானால் வழி தெரிந்தவர்களை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்றார் பிக்கு. பிக்குவின் அறிவுரை சரி என உணர்ந்த மன்னன் வைதீகர்களை அழைத்து முதலில் யாக குண்டத்தில் நீங்கள் குதியுங்கள் பின்னர் அதை தொடர்ந்து நான் குதிக்கிறேன். எனக்கு சொர்க்கத்தை காட்டிவிட்டு நீங்கள் புவிக்கு சென்றுவிடுங்கள் என்றதும் வைதிகர்கள் கடும் கோபம் கொண்டனர். நீச மொழியையும்  நீசனின் வார்த்தையும் கேட்டதால் நீயும் நீசனாகி விட்டாய் எனவே சொர்க்கம் செல்லும் தகுதி உனக்கில்லை என்றுசொல்லி விட்டு விரைந்தனர். 

களப்பிரர்கள் செய்தது என்ன?
01. வேள்வி மற்றும் சடங்குகள் செய்வதை தடை செய்தனர் 
செல்வங்களும் ஆதிகாரமும் வைதீகர்களிடம் குவிந்திருப்பதை கண்ட களப்பிர மன்னன் அதற்க்கு காரணமான வேள்வி மற்றும் சடங்குகள் செய்வதை தடை செய்கின்றனர். உயிரினங்கள் பாலியிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டது. உழைப்பினால் விளைந்த விளைபொருள்களை வீணாக்கப்படுவது  தடுக்கப்பட்டது. 
02. பொது நீக்கினர்: மேலும் வேள்வி மற்றும் சடங்கின் மூலம் அவர்கள் தனமாக பெற்ற நிலங்களை திரும்ப பெற்று பொது பயன்பாட்டிற்க்கு (மக்களுக்கு) கொடுத்துவிட்டனர்.  
வேள்வி குடி செப்பேடு சொல்லும் விவரம் கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுஞ்சாடையான் என்னும் பாண்டிய மன்னனிடம் ஒரு பிராமணன் வேண்டுகோள் விடுகிறான். முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னனுக்கு வேள்விகள் செய்து வந்திருந்த கொற்கை கிழான் மற்றும் நற்கொற்றன் என்னும் எங்கள் மூதாதையர்க்கு அந்த கிராமத்தையே தனமாக அளித்தான் மன்னன். அவர்களுக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினர் வேள்வி குடி கிராமத்தை பயன்படுத்தி வந்தனர். களப்பிர மன்னன் பாண்டிய நாட்டை கைப்பற்றிய போது இந்த கிராமத்தை திரும்ப பெற்று பொது பயன்பாட்டிற்கு மக்களுக்கு கொடுத்துவிட்டான். அருள் கூர்ந்து அந்த கிராமத்தை அவர்களின் வாரிசான எங்களுக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகிறான். பாண்டிய மன்னனும் இசைந்து அவர்களுக்கே கொடுத்து விடுகிறான். 
03. நிதி உதவினர்   அச்சுதன் என்னும் களப்பிர மன்னன் இரு பிறப்பாளர்கள் என்னும் வைதீகர்களுக்கு நிதி ஈந்து மனம்  மகிழ்ந்தான் என்ற குறிப்பதை அளித்து  களப்பிரர்கள் வைதீகர்களின் பகைவர் இல்லை என்பதை விளக்குகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி.   
04. தமிழ் மொழியின் வரி வடிவங்களை மாற்றினர் தமிழ் மொழியின்  வரிவடிவம் இது வரை மூன்று பரிமாணங்களை கொண்டுள்ளது.
 1. தமிழி கி பி மூன்றாம் நூற்றண்டு வரை உள்ள தமிழ் மொழியின் வரி வடிவத்திற்கு தமிழி என்று பெயர்.   
 2. வட்டெழுத்து கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி பத்தாம் நூற்றாண்டு வரை இருந்த  எழுத்திற்கு வட்டெழுத்து என்று பெயர். 
 3. தமிழ் எழுத்து கி பி பதினோராம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை உள்ள வரி வடிவத்திற்கு தமிழ் எழுத்து என்று பெயர்.
கி பி மூன்றாம் நூற்றாண்டு வரை இருந்த தமிழி என்ற வரி வடிவத்தை வட்டெழுத்தாக மாற்றியர்கள் களப்பிரர்கள். ஏன் இந்த எழுத்தை மாற்றினார்கள் என்றால் தமிழி என்ற எழுத்து கோடுகளை கொண்ட எழுத்து. ஓலை சுவடிகளில் எழுதினால் ஓலை சுவடிகள் கிழிந்து விடும், மேலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதால் கோடுகளை கொண்ட எழுத்தை வட்டெழுத்தாத மாற்றினார்.
தமிழ் மொழியில் உள்ள சிறப்பு எழுத்துக்களாக "ற" "ன" "ள" "ழ" ஆகிய எழுத்துக்கள் பிராகிருத மொழியில் இல்லை. எனவே களப்பிரர்கள் தமிழ் மொழியின் சிறப்பை குன்ற செய்யாமல் பிராகிருத மொழியில் இல்லாத "ற" "ன" "ள" "ழ" ஆகிய  எழுத்தைகளை   உருவாக்கினர்.
ஓலை சுவடிகளை களப்பிரர் காலத்திற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது ஓலை சுவடிகளில் பதிவிட்டு பாதுகாக்க வேண்டிய அவசியம் என்னவென்றால்.  பகவன் புத்தரின் போதனைகள் எல்லாம் மக்கள் மொழிகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்தரின் அருள் மொழி. எனவே புத்தரின் போதனைகளை பதிவிடவே பிராகிருத மொழி வடிவத்தை இங்கு கொண்டுவந்து இருக்கின்றனர்.   
05. புதிய பாக்களை உருவாக்கினர் களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றும் முன் தமிழில் நான்கு பாக்கள் இருந்தன.  அவைகள்  01. ஆசிரியப்பா 02.வஞ்சிப்பா 03.வெண்பா 04.கலிப்பா. களப்பிரர்கள் மேலும் புதிய மூன்று பாவினங்களை உருவாக்கினர்.  அவைகள் 01. தாழிசை 02. துறை பா 03. விருத்தப்பா. பழைய நான்கு பாக்களும் புதிய மூன்று பாக்களும் கலந்து ( 4 x 3 ) புதிதாக பனிரெண்டு வகை செய்யுள்கள் உருவாக்கப்பட்டன. 
06. புதிய இலக்கணம் எழுதப்பட்டது புதிய பாவினங்களுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. ஆகவே, யாப்பிலக்கணம் (செய்யுள் இலக்கணம்) எழுதப்பட்டது.  
யாப்பிலக்கண நூல்கள்
 1. காக்கைபாடினியம் - காக்கைபாடினியார்.
 2. நத்தத்தம் - நத்தத்தனார்
 3. பல்காப்பியம்  – பல்காப்பியனார்  
 4. பல்காப்பியப் புறனடை – பல்காப்பியனார்  
 5.  அவிநயம் – அவிநயனார் சைன சமயத்தவர
07. புதிய நூல்கள்  இந்த புதிய எழுத்துக்கள், புதிய பாக்கள், புதிய இலக்கணம் எல்லாம் சேர்ந்து பல புதிய நூல்களை உருவாக்க உதவியாக இருந்தது.   களப்பிரர் காலத்தில் பல இலக்கண இலக்கிய நூல்கள், சமய நூல்கள், மருத்துவ நூல்கள்  வெளிவந்தன. ஆராய்ச்சி பேரறிஞர் களப்பிரர் காலத்தில் வெளிவந்த சமண மற்றும் சைவ இலக்கிய நூல்களை பட்டியலிட்டு அளிக்க முடிந்த அவரால் பௌத்த இலக்கிய நூல்களை குறிப்பிட்ட முடியவில்லை. அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம் களப்பிரர் காலத்தில் பௌத்தம் செழிப்புடன் இருந்தது. பௌத்த நூல்கள் அனைத்தும் மறைந்து போனது (அழிக்கப்பட்டுவிட்டது)   
களப்பிரர் சமயம் எது?
களப்பிரர் சைவராக  அல்லது வைணவராக இருந்தால் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற சொல்லே வந்திருக்காது.
(A) களப்பிரர் சைவர் 
பெரிய புராணம் கூற்ற நாயனார் என்ற களப்பிர மன்னனை சைவர் என்றுரைக்கிறது. 
சைவ சமயத்திற்க்கு உயர்வு வேண்டி பெரியபுராணம் வரலாற்றை திருத்தி தமக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டது என்றுரைக்கிறார் பேரறிஞர் அண்ணா. மேலும் அது சாக்கிய நாயனார் என்னும் ஒரு பௌத்த பிக்குவின் வரலாற்றையே தலைகீழாகி ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டது என்றுரைக்கிறார். எனவே பெரிய புராணம் கூற்ற நாயனாரை சைவார் என்றுரைப்பதை புறம் தள்ளவேண்டியுள்ளது. சாக்கிய நாயனார் 
(B) களப்பிரர் வைணவர்  
அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மன்னன் வைணவன் என்றுரைக்கிறார் மயிலை சினி வேங்கட சாமி அவர்கள். அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம். 
01 திருமாலை வழிபட்டான்:  அலை கடல் கதிர் முத்தம் என்று வரும் யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூல் பாடலில் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு, திருமாலின் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பெரு பெற்றான் என்று கூறுகிறது.  
02 அசுத்தனை காக்க  திருமாலை வேண்டப்படுகிறது: கேடல் அரு மாமுனிவர் என்று வரும் பாடலில் அசுத்தனை காக்கவேண்டும் என்று திருமாலை வேண்டப்படுகிறது. திருமாலை வேண்டுவதால் அச்சுதன் வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவன்.  
03 அச்சுதன் என்பது  வைணவ பெயர்: அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர். பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இது வைணவரை குறிப்பது என்றுரைக்கிறார்.      
04. விண்ணவன் என்பது விஷ்ணு : ‘நலங்கிளர் திருமணியும்’ என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணவன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான் என்றுரைக்கிறார் .
(C) களப்பிரர்   சமணர்கள் 
மயிலை சினி வேங்கட சாமி அவர்கள் களப்பிரரை சமணர் என்றே கூறுகிறார் அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம்.
01. சூலவம்சம் என்னும் இலங்கை நூல்
மொக்கல்லானன் II என்னும் இலங்கை மன்னனை கஸ்ஸபன் துரத்திவிட்டான். பிறகு இவன் தமிழ்நாட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்தான். மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்த பன்னிரண்டு நிகந்தர் நண்பர்களோடு இலங்கைக்கு சென்றான். பின்னர் மொக்கல்லானன் பதினெட்டுயாண்டு (கி. பி. 497 - 515) அரசாண்டான் என்றுரைக்கிறது சூலவம்சம்.
நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே, மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்து சமண களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது. 
இலங்கையை ஆண்ட களப்பிர மன்னர் சமணரா பௌத்தரா? கடல் கடந்து செல்லக்கூடாது என்பது சமண சமயத்தில் உள்ள மரபு பின் எவ்வாறு அங்கு சென்றனர்? என்ற வினா எழுகிறது    
(D)  களப்பிரர்  பௌத்தர்கள்  
களப்பிரர் சைவர் (கூற்ற நாயனார்), வைணவர்  (அச்சுத விக்கந்தன்) மற்றும் சமணர் (சூலவம்சம்) என்பதற்கு ஆதாரம் அளிக்கும் ஆராய்ச்சி பேரறிஞரால் பௌத்தர் என்பதற்கான ஒரு ஆதாரமும் அளிக்கமுடியவில்லை. ஆனால் களப்பிரர் காலத்தில் பௌத்தம் சிறப்பு பெற்று இருந்தது என்று மட்டுமே கூறமுடிந்தது அவரால்.
01. வண. புத்த தத்தர்:    கி பி ஐந்தாம் நூற்றாண்டில்  வாழ்ந்த புத்த தத்தர் அசுத்தன் என்னும் களப்பிர மன்னன் காலத்தில் வினைய வினிசம் என்ற நூலை எழுதினார். அசுத்தன் புத்த தத்த தேரரை ஆதரித்தார் என்றும் மயிலை சினி வேங்கட சாமி கூறுகிறார்.
02. அருக கடவுள் நலங்கிளர் திருமணியும் என்று தொடங்கும் யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூல் பாடலில் களப்பிரர் ஆட்சி ஓங்க வேண்டும் என்று அருக கடவுளை வேண்டுகிறது என்ற குறிப்பையும் அளிக்கிறார். இங்கே அருகன் என்பதை தீர்த்தங்கர் என்று கூறுகிறார். அருகன் என்பது பகவான் புத்தரை குறிப்பது. அருகன் மேடு   
03 கடல் வணிகம்: கடல் வணிகத்தில் செழிப்புடன் இருந்தது தமிழகம். சமணர் கடல் கடந்து செல்லக்கூடாது என்பது மரபு. வைணவருக்கும் இது பொருந்தும். ஆனால் இந்த  மரபு பௌத்தத்திற்கு பொருந்தாது. கடல் வழி வணிகம் செய்து செல்வம் ஈட்டி செழிப்புடன் வாழ்ந்தவர்கள் பௌத்தர்கள் என்றுரைக்கிறார் பேராசிரியர் பத்மாவதி அவர்கள். அழிந்து போன பௌத்த விகாரங்களில் அகழாய்வு செய்தபோது பெருமளவு வெளி நாட்டு காசுகளும் பொருள்களும் இங்கு கிடைத்தது. 
உலகில் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தமிழ் பௌத்தம் என்றுரைக்கிறார்  கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள். 
04 அக்கசாலை நாணயங்களை வெளியிடும் அக்கசாலை என்பது பௌத்த விகாரங்களையே நம்பி இருந்தது. அக்க சாலை பெரும்பாலும் விகார் அருகே அமைந்திருந்தது  என்றுரைக்கிறார் பேராசிரியர் பத்மாவதி அவர்கள். 
05 பௌத்த அடையாளங்கள் அழிப்பு வைதீகத்தை தொடக்கம் முதல் இறுதிவரை கடுமையாக தாக்கியது பௌத்தம் மட்டுமே. சமணம் பௌத்தம் போன்று தாம் அழிக்க கூடாது என்பதால் வைதிகத்துடன் சமரமானது. எனவே பௌத்த விகாரங்கள் அழிக்கப்பட்டது, சிலைகள் அழிக்கப்பட்டது, நூல்கள் அழிக்கப்பட்டது ஆனால் சமண சமயத்தில் அவைகள் காக்கப்பட்டது என்றுரைக்கிறார்  பேராசிரியர் பத்மாவதி அவர்கள்.

மேலும் விரிவாக படிக்க
01 .நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் (தட்டச்சு வடிவில்)
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி. வேங்கடசாமி

02. பேராசிரியர் ஆ பத்மாவதி களப்பிரர் பற்றிய உரை

03. களப்பிரர் - நடன காசிநாதன்

04. V.Balammbal - Some common Features in Six Pandya Copper Plates

05. ரவிக்குமார் - பூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு

06. இரா.கிருஷ்ணமூர்த்தி - களப்பிரர் நாணயம்

Wednesday, February 01, 2017

கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு

குடியரசு தின நாள் 26-01-2017 அன்று சென்னை எழும்பூரில் வண. போதிபாலா (பிக்கு) மற்றும் பேராசிரியர் முனைவர் க. ஜெயபால் அவர்கள் இணைந்து எழுதிய மனித மன வகைபாடுகள் (புக்கல பஞ்ஞதி அபிதம்மா பீடகத்தின் நான்காம் பிரிவு) நூல் வெளியிட்டு விழாவில் முதல் நூலை பெற்று சிற்றுரையாற்றினார் திரு ஒரிசா பாலு அவர்கள். அவரின் உரை

இமயம் முதல் குமரி வரை என்ற சொற்றோடர் எந்த மொழியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மொழியில் தான். ஒரு அலுவலகம் என்று எடுத்துக்கொண்டாலும் அல்லது ஒரு அருங்காட்சியகம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி அங்கு ஒரு புத்தர் சிலையை காணலாம்.
பௌத்தத்தில்  தமக்கு ஆர்வம் ஏற்பட்ட காரணம்
01. தாய்லாந்தில் இருந்தபொழுது மணிமேகலை தெய்வத்தை தாய்லாந்து மக்கள் மணிமேகலை என்று வணங்குவது
02. தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், பர்மா, மலேசியா என எத்துணை நாடுகள் இருக்கின்றனவோ அத்துணை நாடுகளுக்கும் இந்த கடலோடிகளுக்கும், பௌத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.
(Zen Buddhisim) ஜென் பௌத்தம் என்பதனை சிலர் தென் பௌத்தம் என்றுரைக்கின்றனர்.  அவ்வாறு அழைப்பதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது. சீன மக்கள் இந்த தென் கிழக்கு ஆசிய பகுதிகளை இன்று கூட ஆசிய டெங்கா (Tenka) என்று அழைக்கின்றனர். ஆசியா டெங்கா என்றால் ஆசியா தென்கரை என்று பொருள். மலேசியாவிலும் டெங்கா என்ற சொல் தென்கரையை குறிக்கிறது.   டெங்கா  என்பது கடற்கரை சார்ந்த சொல். 

உலகம் முழுவதும் தமிழ் கடந்து இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் சமூகத்தை பார்த்து இருக்கிறேன். உலகிலே மிக பழமையான நாகரிகம் எது என்றால் அது தமிழ் நாகரிகம் மட்டுமே. அது உலக நாடுகள் அனைத்துணையுடன் தொடர்புடையது. கடலை முதன்மை வேலையாக கொண்டு தமிழ் நாகரிகம் எல்லா திசைகளிலும் பரவியிருக்கிறது. தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்கள் உலகம் முழுவதும் உள்ளது.  

மணிமேகலை வான் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. விமானம் இல்லாமல் எப்படி சென்று இருக்க முடியும். மணிமேகலை கடல் வழிதான் சென்றிருக்கவேண்டும்.   கணகம் என்பதின் பொருள் எளிதில் கடக்க முடியாத பாதை. இன்றும் மீனவர்கள் பயன்படுத்தும் சொல் ( தனுஷ்கோடி, மலத்திவு என பல மீனவர்கள்). கடலில் காற்று மற்றும் சுழல் அதிகமாக இருக்கும் பாதைக்கு  கணக பாதை என்று பொருள்.

ஜாவா, ஜப்பான், பர்மா, சீனா, கொரியா போன்ற நாடுகளுடன் தொடர்புடைய பௌத்தம் என்பது அதன் அடிப்படை வேர் தமிழ் பௌத்தம். கடலுக்கு சென்று திரும்பி வந்த சமூகம் என்றல் அது தமிழ் சமூகம் தான். திரைமீலன் என்பது எங்கும் கிடையாது. திரைமீளன் என்றால் கடலுக்கு சென்று திரும்பி தான் இருந்த இடத்திற்கு திரும்புபவன். இந்த திரைமீளன் தான் திரமிளா  என்றும் திரவிடா என்றும் மருவியது .

சமஸ்கிருத எழுச்சி காலம் என்பது கனிஷ்கார் காலம் முதல் குப்தர் காலம் வரைதான். இதற்கு முன் எல்லோருக்கும் தெரிந்த மொழியாக இந்தியாவில் தமிழ் மொழி இருந்தது. உதாரணம் சிந்து சமவெளியில் 600 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இருக்கின்றன, தாம் மட்டும் 44,6௦௦ தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் கண்டறிந்ததாகவும் அதில் சுமார் 12,000 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இந்தியாவில் இருக்கிறது  என்றும் உரைத்தார்.                
   
பண்டித அயோத்திதாசரை இன்று பலர் அறிந்து இருக்கின்றனர் (முக அடையாளம்) ஆனால் அவரின் சிந்தனைகளை படித்து அறிந்துணர்ந்தவர்கள் அரிதாக இருக்கின்றனர். பண்டிதரின் சிந்தனைகள் மூன்று தொகுதிகள் வந்துள்ளது. தமிழகத்தில் லோட்டஸ் சுத்தாவை பற்றி அறிந்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.  கற்று உணருங்கள்.

மேலும் விரிவாக இது தொடர்பாக படிக்க 

Friday, October 28, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVIII காஞ்சி கொடைபீகாருக்கு காஞ்சியின்  கொடை 

பீகார் என்ற ஒரு மாநிலத்தின் சொல்லே விகார் என்ற சொல்லின் மருவு. காஞ்சீவரம் (Conjeevaram) என்ற சொல்லும் சீவரம் என்ற சொல்லின் மருவுதான். காஞ்சீவரத்தில் இன்றும் பழைய சீவரம் என்ற இடம் இருக்கிறது.

சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை. சீவரம் மூன்று ஆடைகளை கொண்டது.
ஒன்று உள்ளாடை (Antarvasaka)
மற்றோன்று மேலாடை (UttaraSanga)
மூன்றாவது  வெளியாடை (Sanghati). 
இந்த மூன்று சீவர ஆடையை திரிசீவரம் என்பவர். இந்த திரி சீவரம் என்ற சொல் தான் மருவி திருச்சி (திரிசீ-  திரி சீவர பள்ளி) யாக மாறியிருக்கலாம் என்பது என்கருத்து. 01. திரி 02. சீவரம் 03.பள்ளி இந்த சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை. இவை பாலி மொழி சொற்கள். இது மேலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது          


குர்கிஹார்க்கு  காஞ்சியின்  கொடை 
குர்கிஹார் ஒரு மலை கிராமம். இது கயா மாவட்டத்தில் உள்ளது. பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இது கயாவில் இருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

சீன அறிஞர்கள் பாகியான் மற்றும் யவங் சுவாங் இங்கு வந்து இருக்கின்றனர். ஜெனரல் டிட்டோ (Ditto) இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார். அவர் இங்கிருக்கும் தொல்பொருள்களை முதன் முதல் (1847) கவனத்திற்கு கொண்டுவந்தார். இரண்டாவது முறை இந்திய தொல்பொருள் துறையை உருவாக்கிய ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அவருடன் இணைந்து அகழாய்வு குழிகள் எடுத்து  பல பௌத்த சிற்பங்களை வெளி கொண்டுவந்தார்.  ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காமும் இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார் (1861-62  மற்றும் 1879-80).

திடீர் என 1930 ஆம் ஆண்டு இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் குர்கிகரில் உள்ள ஒரு அறையில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. ஒரு சில மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பூசப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் பாட்னா பொருட்காட்சியாகத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. .

இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. பல எழுத்துக்கள் தெளிவாக இல்லை. சில இரண்டு அல்லது நான்கு எழுத்துக்கள் மட்டுமே இருக்கிறது. எனவே அவ் எழுத்துக்களை கொண்டு கொடை அளித்தவர் மற்றும் எங்கிருந்து அளிக்கப்பட்டது என அறிய முடியவில்லை.

கொடை அளித்த பௌத்த பிக்குகளின் பெயர்களும் கொடையின் விவரங்களும்.

01. அம்ருதவர்மன்
நாகரி எழுத்தில் இருந்து அறியப்படும் செய்தி : இவர் அகிலா (Akkila) என்று தொடங்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். தலைமை பொருளாளர் அவதத்த நாகாவை (Avadata Naga) போன்று பிரபலமானவர் இவர் காஞ்சியில் நன்கு அறியப்பட்டவர்
கொடை: நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, காக்கும் கை பஞ்ச ரத பீடத்தின் மேல் இரு தாமரை பீடம் (Double Lotus Pedestal). நெற்றி திலகம், ஞான முடிமீது சுடர் - உயரம் : மூன்று அடி பத்து அங்குலம் ( 3' 10") - அகலம் ஒரு அடி ஏழு அங்குலம் ( 1' 7") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9589 - நூல் 
குறிப்பு S.No 6 பக்கம் .No 126

02. புத்தவர்மன் 03. தர்மவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி அரை அங்குலம் (1' 1/2") - அகலம் ஒன்பது அங்குலம் ( 9") - தொல்பொருள் பதிவு எண் : 9597 - நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு  S.No 20 பக்கம் 130
04. தூதசிம்மன் 
கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஐந்து முக்கால் அங்குலம் ( 5 3/4") - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") - நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9602 - நூல்  குறிப்பு : S.No 114 பக்கம் 146
05. பிரபாகரசிம்மன்
(A) கொடை:அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை - ஒரு தாமரை பீடம் - மூன்று ரத பீடம் - உயரம் : எட்டு அங்குலம் ( 8" ) - அகலம் : மூன்று அங்குலம் ( 3") - நூற்றாண்டு பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9637 - நூல்  குறிப்பு : S.No 50 பக்கம் 135

(B) கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஆறு அங்குலம் ( 6" ) - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") -நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9604 -  நூல்  குறிப்பு - : S.No 115 பக்கம்146
06. மஞ்சுஸ்ரீ வர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : பன்னிரண்டு அரை அங்குலம் ( 12 1/2" ) - அகலம் : ஏழரை அங்குலம் ( 7 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9618 -  நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139

(B) கொடை: நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலாம் ( 1' 1" ) அகலம் ஆறரை அங்குலம் ( 6 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9619 - நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139
07. வீரியவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் :பத்து அங்குலம் (10") - அகலம் ஐந்து அங்குலம் ( 5") - தொல்பொருள் பதிவு எண் : 9633 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : ஒன்பது அங்குலம் (9") - அகலம் : ஐந்து அங்குலம் (5") - தொல்பொருள் பதிவு எண் :9725 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 17 பக்கம் 129

(B)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, அறவழி முத்திரை - உயரம் : ஏழு அங்குலம் (7") - அகலம் நான்கு அங்குலம் ( 4") - தொல்பொருள் பதிவு எண் : 9634 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : எட்டு அங்குலம் (8") - அகலம் : நான்கு அங்குலம் (4") - தொல்பொருள் பதிவு எண் :9810 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 14 பக்கம் 128
08.  புத்தவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஐந்தரை அங்குலம் (5 1/2") - அகலம் மூன்றே கால் அங்குலம் ( 3 1/4 ") - தொல்பொருள் பதிவு எண் : 9775 - - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 11 பக்கம்128

(B) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9650 நூல்  குறிப்பு: S.No 207 பக்கம் 159
09  புத்த ஞானர் 10. சுகசுகர் 
கொடை: பீடம் - அளவு : 11" x 5 1/2" x 8" தொல்பொருள் பதிவு எண்: 9728 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 166  பக்கம்156
11. விரோசன சிம்ம ஸ்தவிரர் 
கொடை: பீடம் - அளவு : 13" x 7" x 7 1/2" தொல்பொருள் பதிவு எண்: 9729 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 164 பக்கம் 155 -
இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்
12. நாகேந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலம் (1' 1") - அகலம் ஏழு அங்குலம் (7")- தொல்பொருள் பதிவு எண்: 9789 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 15 பக்கம் 129
13.  சந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒன்பதே கால் அங்குலம் (9 1/4") - அகலம் ஐந்து அங்குலம் (5")- தொல்பொருள் பதிவு எண்: 9759 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 21 பக்கம் 130
14.  ரகுலவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : எட்டரை கால் அங்குலம் (8 1/2") - அகலம் நான்கரை அங்குலம் (4 1/2")- தொல்பொருள் பதிவு எண்: 9752 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 49 பக்கம் 134
15.  வீரவர்மர்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை- உயரம்: பத்து அங்குலம் (10 ") - அகலம் நான்கு அங்குலம் (4")- தொல்பொருள் பதிவு எண்: 9632 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 9 பக்கம் 127
16.  அவலோகித சிம்மர்
கொடை: பீடம் - அளவு : 2 1/2" x 4" தொல்பொருள் பதிவு எண்: 9806 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு : S.No 165 பக்கம் 156
 இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்
17.  புத்தவர்மன் (கந்த குடி )
(1) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9648 நூல்  குறிப்பு: S.No 205 பக்கம் 159
(2) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9649 நூல்  குறிப்பு: S.No 206 பக்கம்159
(3) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9651 நூல்  குறிப்பு : S.No 208 பக்கம் 159
இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.


~*~
01. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் .என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

02. நூல் குறிப்பு பக்கம் Patna Museum Catalogue of Antiquities (1965)


நூல் குறிப்புகள்04. பௌத்தமும் தமிழும்  தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

Saturday, October 15, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்

சாக்கிய நாயனர்  கோவில்  (அ) திருமிகு வீரட்டானேசுரர்   கோவில்


அமைவிடம் 
ஊர்                            : கோனேரி குப்பம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
சாக்கிய நாயனர்  கோவில் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிகுப்பத்தில் உள்ளது. மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது இக்கோவில்.

பௌத்த அடையாளங்கள் 
மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இங்குள்ளது. இக்கோயில் உள்ளே புத்தரது பாதபீடிகை மற்றும் சாக்கிய நாயனார் படிமம் (அஸ்தி) உள்ளது.


டாக்டர் ம. இராசமாணிக்கனார் 
நம்பியாண்டார் நம்பிக்கு ( கி. பி 985 - 1014) ஏறத்தாழ 100 ஆண்டுகள் பின் வந்த சேக்கிழார் (கி. பி 1113 - 1150) பெரிய புராணத்தை எழுதினார். அப்பர் மற்றும் சம்பந்தர்க்கு காலத்திற்கு முற்பட்டவர் சாக்கிய நாயனார். சாக்கிய நாயனார் காலம் கி, பி 400 - 600. சாக்கிய நாயனார் காஞ்சிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார்.  காஞ்சிக்கு சென்று பல சமயங்களை ஆய்வு செய்தவர். சாக்கியர் என்பது காரணப்பெயர்.  பௌத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர். சிவனை கல் எறிந்து வழிபட்டார்.  ( நூல் பெரிய புராண ஆராய்ச்சி )  

 எழுத்தாளர் மு.நீலகண்டன் 
பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமற்போயிற்று. இதனால், பௌத்தத் துறவிக்கோலத்தை மாற்றாமல் ஒரு சிவலிங்கத்தைச் சிறுகல்லால் எறிந்து பூசை செய்து வந்தார். 

அறிஞர் அண்ணாவின்  வினாவும்  விளக்கமும்
01. சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார்?
சாக்கியர் முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறிய புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. சாக்கியர் வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று எப்படிக் கூறமுடியும்? 
பெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும், பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாருக்கும் சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தை சேர்ந்தவர் என்று தெரியாதா அல்லது தெரிந்தும் மறைத்தார்களா?
02. சாக்கியர்  என்ன ஆராய்ச்சி செய்தார்?
சாக்கியர் எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று ஆய்வு செய்தாரா அல்லது  துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்று ஆய்வு செய்தாரா?
03. சாக்கியருக்குத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்  ன்ற எண்ணம் ஏன் தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று? 
எந்த ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்குப், பிறப்புத் துன்பங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது. காரணம் பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. பொது அறிவு நூல்களில் அது கூறப்படவில்லை.
சாக்கியர் தாம் இருந்த முதல் சமயத்தில் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படவில்லை என்பதால் துன்பங்களை நீக்கிக்கொள்ள வழிகளை காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும்.
04. சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்கு காரணம் என்ன? 
இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 01. சாக்கியர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார். 02. சாக்கியரின் ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை அதனால் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார்.
முதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர். அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர். இதனை பெரியபுராணமே கூறுகிறது.  எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது.
இரண்டாவது காரணம்  ஏற்புடையதாக இருக்கிறது. தம்மை விட கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர் எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்பது சரியானதாக இருக்கும். 
05. சாக்கியரை பிக்குவாக (பௌத்த துறவியாக) மாற யாராவது அவரை கேட்டார்களா?
காஞ்சி சென்ற  சாக்கியர் பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து பௌத்த சமயத்தைத் தழுவினார். பௌத்த பிக்குவாகவும் மாறினார். பௌத்தம் ஏற்றும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார். கடைசியில் சைவமே சிறந்த சமயமெனக் கண்டு அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது.
முதலில் அவர் செய்த ஆராய்ச்சியினால்தான் பௌத்தம் ஏற்றார். ஏற்ற பின்னரும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது விந்தையானது. தம்முடைய ஐயப்பாட்டினை பௌத்தம் நீக்கவில்லை என்றால் பௌத்தம் தழுவிய சாக்கியர் பிக்குவாக மாறியது ஏன்?
சாக்கியரை பிக்குவாக மாற யாராவது அவரை கேட்டார்களா? அப்படி கேட்டிருந்தாலும், இன்னும் என்னுடைய ஐயம் நீங்கவில்லை, ஆராய்ச்சியும் முடியவில்லை, இன்னும் பல சமயங்களை ஆராயப்போகின்றேன் என்று கூறியிருக்கலாம்.
06. சாக்கியர் சைவ சமயத்தை பின்பற்ற அச்சப்பட்டாரா?
பௌத்தம் ஏற்ற பின் சாக்கியர் தொடர்ந்த ஆராய்ச்சியால் சைவமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த பின்னர் அதனை பின்பற்ற  அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. பொய் எது மெய் எது என்று கண்டறிந்த ஒருவர் பொய்யை புறக்கணித்து விட்டு மெய்யை பின்பற்ற வேண்டும்.

சாக்கியர் தம்மை பிக்குவாக பிறருக்கு காட்டிக்கொண்டார்.(சீவர ஆடையை தவிர்க்கவில்லை. சாக்கியர் என்ற காரண பெயரையும் நீக்கவில்லை. பிக்கு சங்கத்தில் தான் தாங்கினார். இறந்த பின்னும் அவரின் படிமம் அருகில் புத்த பாதம் வைக்கப்பட்டது )

சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாக எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (திருநீறு  பூசிக்கொள்ளவில்லை அக்கமணியை அணியவில்லை)
07. சைவத்தை ஆராய்ச்சி செய்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாதா? 
பல சமயங்களை ஆராய்ந்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாமல் இருக்குமா? உண்மை என்னவென்றால் சினம் கொண்டு சிவலிங்கத்தை  கல்லால் அடித்தார் என்பது தான் உண்மை.
08. பௌத்தரான சாக்கியர் எவ்வாறு பெரிய புராணத்தில் இடம் பெற்றார்? 
பெரிய புராணம் என்ற ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள் பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும் திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. பௌத்த பிக்குவின் வரலாற்றைத் தலைகீழாக்கி அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர்
சிலையமைப்பு
பௌத்தத்தில் புத்தருக்கும் போதிசத்துவர்க்கும் தான் சிலைகள் அமைப்பது வழக்கம். என்வே சாக்கிய நாயனாருக்கு சிலை அமைந்த்திருக்க வாய்ப்பு இல்லை.  கோவில்களில் காணப்படும் சாக்கிய நாயனாரின் சிலைகளில் பௌத்த அடையாளங்கள்  ஏதும் இல்லை. அவரின் சிலை சைவராக அமைக்கப்பட்டுள்ளது. 

நின்ற நிலை. வணங்கும் கை. தொங்கிய முடி. கால் அணி (தண்டை). கை அணி. கழுத்து அணிகள். இடையணிகள். முப்புரி நூல். தோள்பட்டை அணி.       

உதாரணமாக 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனாரின் தலைமுடியை (இரு பக்கமும் தொங்கும் தலை முடி) சடைமுடியாக மாற்றினால் அவர் திரு நீலகண்டர் ஆவார்.   இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  திருமுடியாக மாற்றினால் அவர் இயற்க்கை நாயனார் ஆவார்.  இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  வலது பக்கம் சாய்ந்த சடைமுடியாக மாற்றினால் அவர் இளையான் குடி மாறனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை உருத்திராக்க முடியாக மாற்றினால் அவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார். திருமுடியும் தொரட்டி இருந்தால் அவர் வீரன் மீண்டார் ஆவார்  

விளக்கம் 
01. பௌத்தம் ஏற்பது எளிது. அனால் பௌத்த பிக்குவாக மாறுவது எளிதானது இல்லை. காரணங்களில் ஒன்று மனதையும் செயலையும் மாசு அற்றதாக செய்ய பௌத்தம் இல்லறத்தாரை ஊக்குவிக்குமே தவிர கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் பிக்குவாவது எளிதானது அல்ல. ஒருவரை கட்டாயப்படுத்தி பிக்குவாக்க முடியாது. பிக்குகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. திரி பிடகத்தில் (முக்கூடை) ஒரு பிடகம் பிக்குகளுக்கு உரியது. பிக்குவான ஒருவர் துறவை துறந்து இல்லறம் ஏற்பது என்பது மிக எளிது. எனவே சாக்கியர் விரும்பினால் பௌத்த துறவு வாழ்வை நீக்கி வாழ்ந்திருக்கலாம்

02. சாக்கிய நாயனர்  கோவில் தூண்கள் பல அக்கோவில் அருகில் புதர் போன்று இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதர்கள் இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று கண்டறிய உதைவியிருக்கும் 

மேலும் விரிவாக படிக்க உதவும் வலைத்தளங்கள் 
அறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்
எழுத்தாளர் மு.நீலகண்டன்